செய்திகள்


நாளும் ஒரு அப்பிள் உண்டு, நலமுடன் வாழ்வோமாக.

Apfelimages.jpg

இன்றைய நவீன உலகில் உணவுகள் யாவும் நஞ்சாக நோக்கப்படும் சூழல் நிலவுகிறது. பயிர்களுக்கு செலுத்தப்படும் கிரிமி நாசினி, கிரிமிகளை மட்டும் அழிப்பதில்லை, மனிதர்களுக்கும் பக்க விளைவை ஏற்படுத்துகின்றன. சைவமோ, அசைவமோ நாளும் ஒரு ஊழல் ஊடகங்களில் நுகர்வோரை அதிர்ச்சி அடையச் செய்கிறது. விரைவு உணவுப் பழக்கம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது, இத்தகைய உணவுப் பழக்கத்தில் பழங்கள் இடம்பெறுவது குறைவாகக் காணப்படுகிறது. ஆகவே சத்துக்கள் சீராகக் கிடைப்பதுமில்லை. பண்டைய உணவுப் பழக்கம், வாழும் சூழலிற்கு ஏற்பவும், பல சத்துக்கள் நிறைந்ததாகக் காணப்பட்டது. இன்று அப்படியில்லை. உணவில் பச்சைக் காய்கறிகளும் பழங்களும் மிகுதியாக இருத்தல் வேண்டும் என்பது உணவு நிபுணர்களின் கருத்தாகும். இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இவ்வருடம் வெளியிட்ட உணவு ஆய்வில், அப்பிள் உடல் நலத்தை நன்கு பேணுவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இரத்தத்தில் எல்.டி.எல் எனப்படும் கொலஸ்ரல் குறைக்க STATINS எனும் மருந்து மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய மருந்து எடுக்கும் நோயாளர்களுக்கு, மருந்திற்குப் பதில் நாளும் ஒரு அப்பிள் வழங்கப்பட்டது. மருந்து தரும் நலத்தைப் பக்க விளைவற்று அப்பிள் வழங்குவது இவ் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுவிசில் ஒரு முதுமொழி உள்ளது அப்பிள் இதயத்தையும் குடலையும் காக்கும் என்பதாகும். அப்பிள் பழத்தில் PEKTINE எனும் தாது உள்ளது. இது செரிமானத்தைத் சரிசெய்வதுடன், வயிற்றுப்போக்கினையும் சீர்செய்கிறது. 2012ம் ஆண்டின் கணக்கெடுப்பில் சுவிஸ்வாழ் மக்கள் வருடம் ஒன்றிற்கு 15.8 கிலோ அப்பிளை உண்டிருக்கிறார்கள். இது நல்ல பெறுபேறே. இருப்பினும் இற்றைக்கு 15 வருடங்களுக்குமேல் இதனை விட அதிகமாக 29 கிலோ உண்டு வந்துள்ளார்கள். நாளும் ஒரு அப்பிள் உண்டு, நலமுடன் வாழ்வோமாக...



» Related News

Schnell und Einfach

Das Internet ermöglicht es uns Ihre Kredit-Anfrage schnell zu erhalten und zu bearbeiten. Einfach die Kredit-Anfrage Online ausfüllen und abschicken. In 24 Stunden erhalten Sie bereits eine Rückmeldung!

Sicher und Diskret

Das Vertrauen unserer Kunden ist unsere Priorität. Ihre Kredit-Anfrage wird deshalb bei uns sicher und diskret behandelt. Gerne stehen wir Ihnen jederzeit auch für eine persönliche Beratung zur Verfügung.

Kredit ab 7.9%

Wunschbetrag in CHF:

Laufzeit in mt
Monatliche Rate :
7.9%
11.9%


Selliah Selvarajah (Rasan)

Im Rietpark 5
8180 Bülach.ZH
Switzerland
Mob: 079 765 50 57
Tel: 044 860 12 05, 044 860 12 14
Fax: 044 860 12 13

E.Mail:info@multiconsulting.ch
E.Mail:srasan@hotmail.com